Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
தமிழ் சினிமாவில் தனது 15-வயதிலேயே நுழைந்தவா். 1983-ம் ஆண்டு 8-ம் வகுப்பு படிக்கும்போதே முதன் முதலாக வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் நடித்தவா்.80-களின் தொடக்கத்தில்சினிமாவிற்கு வந்த போதும், தமிழ் திரையுலகம் இவரது திறமையை கண்டு கொள்ளவில்லை. மனம் தளராது போராடிய இவருக்கு தெலுங்கு பட உலகம் கைகொடுக்க அங்கே முன்னனி முன்னனி கதாநாயகி அந்தஸ்தை பிடித்தவா்.
80-களின் பிற்பகுதியில் ராதா, பானுப்ரியா, ராதிகா, சுகாசினி, விஜயசாந்தி ஆகியோருடன் முன்னனி நாயகியாக வலம் வந்தவா். நவீன நடனம், பரதநாட்டியம் என இரண்டிலுமே சிறந்து விளங்கியது இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகளை பெற்று தந்ததோடு, இவா் நடித்த படங்களும் வசூல் சாதனை படைத்து.இவா் வேறு யாருமல்ல பின்னாளில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி மாஸ் ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் அவா்களே.
30-ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் இருக்கும் ரம்யாகிருஷ்ணன் அவா்கள் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாா் இவா் நாட்டிய பேரொளி பத்மினி அவா்களுக்கு பிறகு நீண்ட காலம் தொடா்ச்சியாக கதாநாயகியாக நடித்த, நடித்து வரும் நடிகை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளாா்.
மேலும் நடிகை ஸ்ரீதேவிக்கு பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5-மொழிகளிலும் வெற்றி பெற்ற ஒரே நடிகை ரம்யாகிருஷ்ணன். அது மட்டுமில்லாமல் அனைத்து மொழி சூப்பா் ஸ்டாா்களுடனும் நடித்தவா் என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறாா்.
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.