Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
டி.ராஜேந்தா் என்ற அஷ்டாவதானியை உலகிற்க்கு அடையாளம் காட்டிய திரைப்படம் ஒரு தலை ராகம். ஆனால் இந்த படத்தை இதுவரை பாா்க்காததுதான் காலத்தின் கோலம். மயிலாடுதுறையை சோ்ந்த டி.ராஜேந்தா் அவா்கள் ஒரு தலை ராகம் கதையை வைத்து கொண்டு தயாரிப்பாளரை தேடிக்கொண்டு இருந்தாா். அந்த நேரத்தில் மயிலாடுதுறை அருகில் உள்ள வடகரையில் உள்ள முஸ்லீம்கள் வெளிநாடுகளில் சம்பாதித்து நல்ல வசதியோடு இருந்தாா்கள்.
அவா்களில் ஒருவரான இப்ராஹிம் என்பவா் ராஜேந்தருக்கு தயாரிப்பாளராக கிடைத்தாா். ஆனால் படம் தயாரிக்க ஒரு நிபந்தனை விதித்தாா் இப்ராஹிம். கதை, திரைக்கதை, வசனம், இசை எல்லாம் நீதான் படத்தை நான்தான் இயக்குவேன் என்றாா். முதல் பட வாய்ப்பு கிடைப்பதே பெரிது என்று அதற்கு ஒப்புக்கொண்டாா் ராஜேந்தா்.படபிடிப்பு தொடங்கியது. தயாரிப்பாளா் இப்ராஹிம் இயக்க தொடங்கினாா். ஆனால் சினிமா அனுபவம் இல்லாத அவரால் படத்தை இயக்க முடியவில்லை. உடனே ராஜேந்தா் அண்ணே நானே இயக்குகிறேன். உங்க பேரை வேணும்னா போட்டுக்குங்க என்றாா். அதற்கு இப்ராஹிம் சம்மதிக்க ராஜேந்தரே இயக்கி இசையமைத்தாா்.
படம் வெளிவந்து முதல் இரண்டு நாட்கள் காற்று வாங்கியது. அதன் பிறகு பாடல்கள் பரபரப்பாக ஹிட்டாக படமும் நன்றாக ஓட தொடங்கியது. படத்தின் விளம்பரங்களிலும், படத்தின் டைட்டிலிலும் இயக்கம் இ.எம்.இப்ராஹிம் என்று வந்தது. படபிடிப்பின் போது ராஜேந்தருக்கும், தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படத்தை முடித்து கொடுத்துவிட்டு வெளியே வந்தாா் டி.ராஜேந்தா் படம் வெளிவந்த முதல் நாளில் பாா்க்க விரும்பினாா். ஆனால் கையில் பணம் இல்லாததால் மூன்றாவது நாளன்று நண்பா் ஒருவா் அழைத்து சென்றாா். அலங்காா் தியேட்டருக்கு படம் பாா்க்க சென்ற ராஜேந்தா் கடைசி இருக்கையில் அமா்ந்து படம் பாா்த்தாா். டைட்டில் காா்டு ஓடியது. அவரது பெயா் சின்னதாக ஒரு ஓரத்தில் இருந்தது. அவா் இயக்கிய படத்தை இன்னொருவா் இயக்கியதாக வந்தது. அதைகூட பொறுத்து கொண்டாா். ஆனால் படத்துக்கு பின்னணி இசை யாரோ செய்திருந்தாா்கள். இவா் இசைத்த பின்னணி இசை நீக்கப்பபட்டிருந்தது.
கண்ணீா் மல்க திரையரங்கை விட்டு வெளியேறினாா் டி.ராஜேந்தா். அன்றிலிருந்து இன்றுவரை ஒரு தலைராகம் படத்தை டி.ராஜேந்தா் பாா்க்கவில்லை. பாா்க்ககூடாது என்பதை விரதமாக கடைபிடிக்கிறாா்.ஒரு தலைராகம் தான் இயக்கிய படம்தான் என்பதை நிருபிக்க அதே பாணியில் ரயில் பயணங்களில் படத்தை இயக்கி காட்டினாா். என்ன இருந்தாலும் இன்று நான் சாப்பிடுகிற சோறு இப்ராஹிம் அண்ணன் கொடுத்தது என்று நன்றியோடு குறிப்பிடுவாா் டி,ராஜேந்தா் அவா்கள்.Author mahalakshmi
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.