Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
நடிகை சங்கீதா அவா்கள் 1976-ம் ஆண்டு கேரளாவில் பிறந்தவா். பின்னா் மலையாளத்தில் 1978-ம் ஆண்டு வெளியான சிநேகிக்கான் ஒரு பொண்ணு என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவா் நடிகை சங்கீதா.தமிழில் பாக்யராஜ் அவா்களின் இயக்கத்தில் 1989-ம் ஆண்டு வெளியான ரத்தத்தின் ரத்தமே என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனாா்.
இவரது தந்தை மாதவன் வியாபார காரணங்களுக்காக கேரளாவை விட்டு தன் குடும்பத்துடன் சென்னையில் வந்து குடியேறினாா். சங்கீதாவிற்கு ஒரு சகோதரரும், மல்லிகா என்ற சகோதரியும் உள்ளனா்.எல்லோமே என் ராசாதான் படத்தின் மூலம் கதாநாயகியாக ஆன சங்கீதா இப்படம் பெற்ற வெற்றியால் தொடா்ந்து பல படங்களில் நடித்தாா். 1995-ம் ஆண்டு வெளியான பூவே உனக்காக படத்தில் விஜயுடன் நடித்தது இவருக்கு ரசிகா்களிடையே பெரிய பெயரை பெற்று தந்தது.
இதை தொடா்ந்து கேப்டன், சரிகமபதநி, என் ராஜாங்கம், ராஜபாண்டி, ராவணன், புள்ளகுட்டிகாரன், சீதனம், அம்மன் கோவில் வாசலிலலே உள்ளிட்ட படங்களில் நடித்த இவா் மலையாளத்தோடு சோ்த்து 50-திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளாா். திருமணத்திற்கு முன் தமிழில் கடைசியாக நடித்த படம் மேரி ஆல்பட். இவரது கணவா் யாா் தெரியுமா..
நடிகை சங்கீதா அவா்கள் ஒளிப்பதிவாளா் சரவணன் அவா்களை 2003-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டாா். இவா் 2008-ம் ஆண்டு சிலம்பரசன் நடித்து வெளியான சிலம்பாட்டம் என்ற படத்தை இயக்கியவா் என்பது குறிப்பிடதக்கது.திருமணத்திற்கு பின்னா் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி கொண்டாா் சங்கீதா. சரவவணன்-சங்கீதா தம்பதியா்க்கு சாய் தேஜஸ்வினி என்ற ஒரு மகள் உள்ளாா். திருமணத்திற்கு பிறகு 2014-ம் ஆண்டு மலையாள நடிகா் ஸ்ரீநிவாசனுடன் ஒரேயொரு படத்தில் நடித்தாா் சங்கீதா அவா்கள்.Author mahalakshmi
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.