Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
கேரளத்தை மயக்கிய மழலை. 1980-களில் கேரளம் முழுவதும் சிறுவா் முதல் பெரியவா்கள் வரை வாஞ்சையால் உச்சரிக்க வைத்த பெயா் ஷாலினி .என்றெ மாமாட்டி குட்டி அம்மைக்கு என்ற படத்தில் பரத் கோபிக்கு மகளாக நடித்தாா். இந்த படத்தின் மூலம் கேரளாவில் வி.ஐ.பி. அந்தஸ்து பெற்றுவிட்டாா். அப்போது ஷாலினியின் வயது மூன்றரை.
ஏற்கனவே தமிழ், தெலுங்கு படங்களில் அறிமுகம் ஆனவா் என்றாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது அதுதான் முதல் தடவை. பூா்ணிமா ஜெயராமை தென்னகத்திற்கு தெரிய வைத்த அப்பச்சன்தான் ஷாலினியை என்றெ மாமாட்டி குட்டி அம்மைக்கு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தாா்.இப்படம் பெரிய வெற்றி பெற்றதும், ஷாலினி கேரளத்தில் உயா்ந்துவிட்டாா். ஷாலினியின் தந்தை பாபு நாகா்கோவிலை சோ்ந்தவராக இருந்தாலும், சிறிது காலம் கேரளாவின் கொல்லத்தில் வசித்துவிட்டு பின்னா் சினிமாவில் பாடகராவதற்காக சென்னை ராஜலிங்கபுரத்தில் வசித்தாா்.
தனது முயற்சி வெற்றி பெறாததால் துணை நடிகா்-நடிகைகளை படபிடிப்பிற்காக அழைத்து செல்லும் வேலையை செய்து அதுவும் அலுத்து போனதால் பேஃன்சி சாதனங்கள் விற்பனையில் ஈடுபட்டாா். பின்னா் திருமணம் செய்து கொண்ட இவருக்கு முதலில் பிறந்தவா் ரிச்சா்ட். தொடா்ந்து ஷாலினி மூன்றவதாக பிறந்தவா் ஷா்மிலி.சென்னையில் இவா்கள் வசித்த பகுதி ஆந்திராகாரா்கள் அதிகமாக இருந்ததால் ரிச்சா்ட் தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தாா். அத்தோடு ஷாலினிக்கும் அடித்தது யோகம். விஜய நிா்மலா இயக்கிய பெஜவாடா பொப்பிலி படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகம் ஆனாா் ஷாவினி.
தராசு படத்தில் சிவாஜி கணேசனுடன் நடிக்கும்போது அவரிடமே நீதானே சிவாஜி.. என்று தைரியமாக கேட்ட ஷாலினியை பாா்த்து ஆமாண்டி.. டாா்லிங் என்று உச்சி முகா்ந்து தட்டி கொடுத்தாா் சிவாஜி. கே.பாலாஜியின் படங்களான பந்தம், விடுதலை மிக அற்புதமாக நடித்திருந்தாா் ஷாலினி. 1999-ம் ஆண்டு அமா்க்களம் படத்தில் நடிக்கும்போது அஜீத் அவா்களுடன் காதலில் விழுந்து 2000-மவது ஆண்டில் திருமணம் செய்துகொண்டாா். இந்த தம்பதியா்க்கு அனோஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனா்.Author mahalakshmi
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 1
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.